Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

1 December 2013

நமது மாவட்டத்தின் வரலாறு

நமது மாவட்டத்தின் வரலாறு:






  • சங்க காலத்தின் 'நெல்லிக் கனி' புகழ்பெற்ற அதியமான் ஆண்ட தகடூர் பகுதி

  • பல்லவர், சுங்கர் நுளம்பர், சோழர், ஹொய்சாளர்கள், மைசூர் உடையார்கள், மதுரை நாயக்கர்கள் என்று பல்வேறு ஆட்சியின் கீழ் இருந்தது.

  • மாவட்டத்தின் 'குண்டனி' பகுதி 13-ஆம் நூற்றாண்டில் ஹொய்சாள மன்னன் வீர ராமநாததனின் தலைமையிடமாக இருந்த்து.


  • முதல் மைசூர் போரில் காவேரிப்பட்டினத்திலுள்ள ஹைதரலியைத் தாக்க இவ்வழியாகச் சென்ற பிரிட்டிஷ் இராணவவும் இங்கே தோல்வியைத் தழுவியது. 


  • இரண்டாம் மைசூர் போரில் சேரம் மற்றும் கர்நாடகப் பகுதிகள் முழுமையும் ஹதாலியின் ஆதிக்கத்திற்குட்பட்டன.

  • ரங்கப் பட்டின ஒப்பந்த்த்தை அடுத்து சேலம் மற்றும் பாரமை ஆல்பகுதிகள் முழுமையும் பிரிட்டீஷார் வசமாயின.  

  • 1792-இல் காப்டன் அலெக்சாண்டர் ரீட் இப் பகுதியின் முதல் ஆட்சித்தலைவரானார்.  அன்றைய சென்னை மாகாண ஆளுனர் ராபர்ட் கிளைவின் ராஜதந்திரத்தால் கிருஷ்ணகிரி பாரமஹாலின் தலைநகரானது
 
  •  1794-இல் இங்கு நாணயச் சாலை ஒன்று உருவாக்கப்பட்டது.  தங்கம், வெள்ளி, செம்பு நாணங்கள் இங்கு வார்க்கப்பட்டன. 


  • 2004 பிப்ரவரி 9-ஆம் தேதி தரும்புரி மாவட்டம்  இரண்டாகப்பிரிக்கபட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.  இது தமிழகத்தின் 30 ஆவது மாவட்டம் .


    முக்கிய ஆறுகள்:  
       
     காவிரி, தென்பெண்ணை, வன்னியாறு, மார்க்கண்டா ஆறு. 


    குறிப்பிடதக்க இடங்கள்


  • ஓசூர்: ஓசூர் என்றால் புதிய நகர் என்று பொருள்.  பெங்களூரின் அருகேயுள்ள இது பிரபலமான தொழில் நகரம்.
  • கிருஷ்ணகிரி அணைக்கட்டு: தருமபுரிக்கும், கிருஷ்ணகிரிக்கும் இடையே அமைந்துள்ள இந்த அணைக்கட்டால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலகங்கள் பாசன வசதி பெறுகின்றன.
  • ராஜாஜி நினைவில்லம்: தொரப்பள்ளியில் அமைந்துள்ள ராஜாஜியின் இல்லம். ஒசூரிலிருந்து 10 கி.மீ. தொலைவு.



  • மாம்பழத் திருவிழா: ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நிகழும் கிருஷ்ணகிரி மாம்பழத் திருவிழா பிரபலமானது.  ருமானி, அல்போன்சா, மல்கோவா, பங்கனப்பள்ளி போன்ற பலவகை மாம்பழங்கள் பார்வையாளர்களின் மனதையும் வயிறையும் ஒருசேர மயக்கும்.



   இருப்பிடமும், சிறப்புகளும்:


  • சென்னையிலிருந்து 245 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
  • ரோஜா உட்பட கண்கவர் மலர் வகைகளுக்கு புகழ்பெற்ற நகரம் ஒசூர்.
  • மலை மீது அமர்ந்துள்ள சந்திரசூடேஸ்வரர் ஆலயம் மிகப் பிரபலமானது.
  • பட்டுப்புழு வளர்ப்புக்குத் தேவையான மல்பெரி சாகுபடிக்கு பெயர்பெற்றது.
  • இருளர் பழங்குடிகள், தேன்கனிக்கோட்டை மலைப்பகுதியில் வாழ்கின்றனர்.

இப்பகுதியின் 12 கோட்டைகள் 'பாரமகால் கோட்டைகள்' எனப்பட்டன.

விஜயநகரப் பேரரசால் கட்டபட்ட கிருஷ்ணகிரி மலைக் கோட்டை தற்போதும் சிறப்புடன் உள்ளது.

இந்தியாவில் ஒரே இந்திய கவர்னர் ஜெனரல் இராஜாஜி பிறந்த இடம் தொரப்பள்ளி.

2 comments:

  1. Kaveri is not flowing through Krishnagiri district. Please correct it.

    ReplyDelete