Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

20 December 2013

காவேரிப்பட்டிணம் டாக்கீஸ் தீர்ப்பு

 
பிரியாணி: மொத்தத்தில் இன்னும் கொஞ்சம் வேகவைத்திருக்கலாம், பிரியாணி பீஸ்கள் இருந்தும் இல்லாதது மாதிரி தெரியும் குஸ்கா!
 
தூம் 3: ஆமிர்கான் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார்.

போலீசாக வரும் அபிசேக் பச்சான் சிறப்பாக செய்திருக்கிறார்.

ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.

‘தூம் 3’ தூள் பறக்கிறது
 
என்றென்றும் புன்னகை :வாய்விட்டு சிரிக்கலாம்.
 
 

காவேரிப்பட்டணத்தில் நாளை மின் நிறுத்தம்

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம், குட்டிகவுண்டனூர் ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (டிச.21) மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின் வாரிய செயற்பொறியாளர் பி.மு.ராஜேந்திரன் தெரிவித்தார்.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்

காவேரிப்பட்டிணம் நகரம், வீட்டு வசதி வாரியம், தளிப்பட்டி, பாளையம், தேர்பட்டி, ஜெகதாப், சவுளூர், நரிமேடு, மோரனஅள்ளி, பன்னிஅள்ளி, தளியூர், கதிரிபுரம், தொட்டிப்பள்ளம், போடரஅள்ளி, கொத்தலம்.

-

19 December 2013

kaveripattinam ATM places :

kaveripattinam ATM places :

1.State bank of india (salem main road)

2.Indian Bank (salem main road)

3.Tamilnad mercantile bank (kosamedu)

4.HDFC Bank (near palacode road)

5.ICICI Bank (palacode road)

6.City union Bank (near anandha studio)

7.Axis bank (near bsnl office)

8.Axis bank (near Balaji Jewellery)

9.Lakshmi Vilas Bank (opposite of bsnl office)

8 December 2013

இராஜாஜி வரலாறு



சி. இராசகோபாலாச்சாரி (10 திசம்பர் 1878 - 25 திசம்பர் 1972),தமிழகத்தில் கிருட்டிணகிரி மாவட்டத்தில்  ஓசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி என்னும் கிராமத்தில் பிறந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்.

வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர் .

1952 -54 காலகட்டத்தில் கேரளம், தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகம் இணைந்த பகுதிகளைக் கொண்ட சென்னை மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்றினார்.

வகித்த பதவிகள்  :

முதலமைச்சர்,மதராச மாநிலம்
பதவியில்
10 ஏப்ரல் 1952 – 13 ஏப்ரல் 1954
ஆளுநர் ஸ்ரீ பிரகாசா
முன்னவர் பி. எசு. குமாரசாமி ராசா
பின்வந்தவர் கு. காமராசர்

இந்திய உள்துறை அமைச்சர்
பதவியில்
26 சனவரி 1950 – 1951
பிரதமர் சவகர்லால் நேரு
முன்னவர் சர்தார் வல்லபாய் படேல்
பின்வந்தவர் கைலாசு நாத் கட்சு

இந்திய கவர்னர் செனரல்
பதவியில்
21 சூன் 1948 – 25 சனவரி 1950
பிரதமர் சவகர்லால் நேரு
Monarch சார்சு VI மன்னர்
முன்னவர் லூயி மவுண்ட்பேட்டன்
பின்வந்தவர் பதவி நீக்கப்பட்டது

மேற்கு வங்க ஆளுனர்
பதவியில்
15 ஆகஸ்ட் 1947 – சூன் 1948
முன்னவர் பிரெடிரிக் பர்ரோசு
பின்வந்தவர் கைலாசு நாத் கட்சு

முதலமைச்சர்,மதராச மாகாணம்
பதவியில்
14 சூலை 1937 – 9 அக்டோபர் 1939
ஆளுநர் ஜான் எர்சுகின்
முன்னவர் கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு
பின்வந்தவர் ஆளுனர் ஆட்சி
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு,
சுதந்திராக் கட்சி

பிறப்பு 10 திசம்பர் 1878
சேலம் மாவட்டம், மதராச மாகாணம்
இறப்பு 25 திசம்பர் 1972 (அகவை 94)
சென்னை
தேசியம் இந்தியர்
வாழ்க்கைத்
துணை
அலமேலு மங்கம்மா
பயின்ற கல்விசாலை சென்ட்ரல் கல்லூரி, பெங்களூரு
மாநிலக் கல்லூரி, சென்னை
தொழில் வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி
துறை வழக்கறிஞர்
சமயம் இந்து

1 December 2013

நமது மாவட்டத்தின் வரலாறு

நமது மாவட்டத்தின் வரலாறு:






  • சங்க காலத்தின் 'நெல்லிக் கனி' புகழ்பெற்ற அதியமான் ஆண்ட தகடூர் பகுதி

  • பல்லவர், சுங்கர் நுளம்பர், சோழர், ஹொய்சாளர்கள், மைசூர் உடையார்கள், மதுரை நாயக்கர்கள் என்று பல்வேறு ஆட்சியின் கீழ் இருந்தது.

  • மாவட்டத்தின் 'குண்டனி' பகுதி 13-ஆம் நூற்றாண்டில் ஹொய்சாள மன்னன் வீர ராமநாததனின் தலைமையிடமாக இருந்த்து.


  • முதல் மைசூர் போரில் காவேரிப்பட்டினத்திலுள்ள ஹைதரலியைத் தாக்க இவ்வழியாகச் சென்ற பிரிட்டிஷ் இராணவவும் இங்கே தோல்வியைத் தழுவியது. 


  • இரண்டாம் மைசூர் போரில் சேரம் மற்றும் கர்நாடகப் பகுதிகள் முழுமையும் ஹதாலியின் ஆதிக்கத்திற்குட்பட்டன.

  • ரங்கப் பட்டின ஒப்பந்த்த்தை அடுத்து சேலம் மற்றும் பாரமை ஆல்பகுதிகள் முழுமையும் பிரிட்டீஷார் வசமாயின.  

  • 1792-இல் காப்டன் அலெக்சாண்டர் ரீட் இப் பகுதியின் முதல் ஆட்சித்தலைவரானார்.  அன்றைய சென்னை மாகாண ஆளுனர் ராபர்ட் கிளைவின் ராஜதந்திரத்தால் கிருஷ்ணகிரி பாரமஹாலின் தலைநகரானது
 
  •  1794-இல் இங்கு நாணயச் சாலை ஒன்று உருவாக்கப்பட்டது.  தங்கம், வெள்ளி, செம்பு நாணங்கள் இங்கு வார்க்கப்பட்டன. 


  • 2004 பிப்ரவரி 9-ஆம் தேதி தரும்புரி மாவட்டம்  இரண்டாகப்பிரிக்கபட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.  இது தமிழகத்தின் 30 ஆவது மாவட்டம் .


    முக்கிய ஆறுகள்:  
       
     காவிரி, தென்பெண்ணை, வன்னியாறு, மார்க்கண்டா ஆறு. 


    குறிப்பிடதக்க இடங்கள்


  • ஓசூர்: ஓசூர் என்றால் புதிய நகர் என்று பொருள்.  பெங்களூரின் அருகேயுள்ள இது பிரபலமான தொழில் நகரம்.
  • கிருஷ்ணகிரி அணைக்கட்டு: தருமபுரிக்கும், கிருஷ்ணகிரிக்கும் இடையே அமைந்துள்ள இந்த அணைக்கட்டால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலகங்கள் பாசன வசதி பெறுகின்றன.
  • ராஜாஜி நினைவில்லம்: தொரப்பள்ளியில் அமைந்துள்ள ராஜாஜியின் இல்லம். ஒசூரிலிருந்து 10 கி.மீ. தொலைவு.



  • மாம்பழத் திருவிழா: ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நிகழும் கிருஷ்ணகிரி மாம்பழத் திருவிழா பிரபலமானது.  ருமானி, அல்போன்சா, மல்கோவா, பங்கனப்பள்ளி போன்ற பலவகை மாம்பழங்கள் பார்வையாளர்களின் மனதையும் வயிறையும் ஒருசேர மயக்கும்.



   இருப்பிடமும், சிறப்புகளும்:


  • சென்னையிலிருந்து 245 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
  • ரோஜா உட்பட கண்கவர் மலர் வகைகளுக்கு புகழ்பெற்ற நகரம் ஒசூர்.
  • மலை மீது அமர்ந்துள்ள சந்திரசூடேஸ்வரர் ஆலயம் மிகப் பிரபலமானது.
  • பட்டுப்புழு வளர்ப்புக்குத் தேவையான மல்பெரி சாகுபடிக்கு பெயர்பெற்றது.
  • இருளர் பழங்குடிகள், தேன்கனிக்கோட்டை மலைப்பகுதியில் வாழ்கின்றனர்.

இப்பகுதியின் 12 கோட்டைகள் 'பாரமகால் கோட்டைகள்' எனப்பட்டன.

விஜயநகரப் பேரரசால் கட்டபட்ட கிருஷ்ணகிரி மலைக் கோட்டை தற்போதும் சிறப்புடன் உள்ளது.

இந்தியாவில் ஒரே இந்திய கவர்னர் ஜெனரல் இராஜாஜி பிறந்த இடம் தொரப்பள்ளி.