Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

22 November 2013

தென்பெண்ணை ஆறு


தென்பெண்ணை ஆறு தென்னிந்தியாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்று. கர்நாடக மாநிலம் சிக்கபல்லபூர் மாவட்டம், நந்தி மலையில் (நந்தி துர்க்கம்) பிறந்து, கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் 391 கிமீ தூரம் பாய்ந்து இறுதியில் தமிழ்நாட்டின் கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் சுமார் 14,449 கி.மீ2 ஆகும். மார்கண்டநதி, பாம்பாறு, வன்னியாறு, கல்லாறு, கெடிலம் ஆறு இதன் முக்கிய துணையாறுகளாகும்

நீர்த்தேக்க கட்டமைவுகள்

ஓசூர் அருகே கேளவாரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி அணைக்கட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனூர் அணைக்கட்டு, சாத்தனூர் பிக்கப் அணை, விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோயிலூர் அணை, சொர்ணவாரி அணை, எல்லீஸ் அணை ஆகியவை இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட நீர்த்தேக்க கட்டமைப்புகள்.



நன்றி தமிழ் விக்கிப்பீடியா

No comments:

Post a Comment